*துணிச்சல்*
வாழ்வில் "துணிவே துணை" என்ற மந்திரத்தை மனதில் ஏற்றி எதையும் எதிர்க்கொண்டு வாழ துணிச்சலுடன் போராடுவது அவசியம்.
துணிச்சல் துன்பங்களை துரத்தி அடிக்கும். இழக்க இனி ஒன்றும் இல்லை என்றவுடன் ஒரு துணிச்சல் வரும் பாருங்கள் அதுதான் முக்கியம்.
வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் துணிச்சல் தேவை.
துணிந்தார்க்கு துக்கம் இல்லை என்பார்கள்.
நாம் எடுக்கும் எந்த ஒரு முயற்சியிலும் இடையூறு ஏற்பட்டால் அதனை அடையாளம் கண்டு கொண்டு அகற்றி விட்டாலே வெற்றிப் பாதையில் பயணம் செய்வது எளிதாகிவிடும்.
எந்த ஒரு செயலையும் செய்து முடிப்பதற்கு மனஉறுதியும் துணிச்சலும் தேவை. துணிச்சல் வெற்றியின் அடையாளம்
துணிந்து செயல்படுவோமா
வாழ்க வளர்க