*வெற்றியும் தோல்வியும்*
வாழ்க்கையை ஒரு விளையாட்டுப் பந்தயமாக எடுத்துக் கொள்.
தோல்வியைக்கண்டு சிரி. அடுத்த முறை நான்தான் வெற்றி பெறப்போறேன் என்று போராடு.
வெற்றியைக் கண்டு பெருமைப்படும் மகிழ்வையும் வளர்த்துக்கொள்.
தோல்வியை எதிர்பார்த்து யாரும் செயல்படுவதில்லை.
விளையாட்டு விரன்போல் சிரித்துக் தோல்வியை எதிர்கொள்.
எல்லோரும் என்ன நினைப்பார்கள் என்கிற அவமான உணர்வுகள் எழுகின்றன.
எல்லாம் கொஞ்ச நேரம்தான். நான் மீண்டும் பழைய மனிதனாக வெளிவருவேன்.
யாரும் என்னை வீழ்த்த முடியாது என்று நமக்கு நாமே சொல்லவேண்டும்.
தோல்வி ஏற்படும்போது மனஉறுதி குறையும். அது தாற்காலிகம்தான்.
நமது வாழ்க்கையும் நமது முயற்சிகளும் ஒரு ஓட்டப்பந்தயம்தான்.
வெற்றி பெற நாம் முதலில் பந்தயத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக பந்தயத்தில் வெற்றி, தோல்வி உண்டு.
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு என்பார்கள்.
அந்த வீரனாக நாம் விளங்க வேண்டும்.
வாழ்க வளர்க