நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு.
இனி எப்படி இருக்க வேண்டும் என்ற விரும்புகிறோமோ அப்படி நம்மை நாமே மாற்றிக் கொள்ளும் ஆற்றலும் நம்மிடம் உள்ளது'- சுவாமி விவேகானந்தர்.
இந்த உலகில் மாற்றம் ஒன்றே நிரந்தரமானது.
அப்பொழுது அது உங்களுக்கு சொந்தமா என்றால் நிச்சயம் கிடையாது.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை புரிந்து கொண்டாலே மற்றவர்களுடைய செயல்களையும் மற்றும் நமக்கு வரும் மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ளும் மனம் நமக்கு வாய்க்கும்.
மாற்றங்கள் வரும்போது கவலை கொள்ளாதீர்கள்.
அது உங்களுடைய வெற்றிக்கான பாதையாக கூட மாறலாம்.
*மனமிருந்தால் மார்க்கம் உண்டு* என்பதை போல் எந்த இடமாக இருந்தாலும் நம் மனம் ஊக்கத்துடன் மாற்றங்களை ஏற்றுக் கொண்டால் ஏற்றம் தரும் வெற்றி நிச்சயம் என்பதை புரிந்து கொள்வோம்.